பாலியல் தொல்லை கொடுத்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி!!

740

Abuse

தமிழ்நாடு சிவகங்கை அருகே, பாலியல் தொல்லை கொடுத்த கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி பொலிசில் சரணடைந்தார்.

சிவகங்கை அருகே, சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 38 மேசன் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி, ராணி, 30. இவர்களுக்கு 14 மற்றும் 12 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

ராமச்சந்திரன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, மே 5ம் திகதி, சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தில், ராணி புகார் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை10 மணிக்கு, மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த ராணி, அவரது கணவர், ராமச் சந்திரனை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

பொலிசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு, வீட்டிற்கு பின்னால், 5 அடி பள்ளத்தில், தேங்கிய தண்ணீரில், ராமச் சந்திரன் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, சிவகங்கை பொலிசார், ராணியை கைது செய்தனர்.

இதுகுறித்து, பொலிசார் கூறியதாவது, கணவன் – மனைவிக்குள், ஏற்கனவே பிரச்னை இருந்தது. ராணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கணவரை பிரிந்து தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

குழந்தைகள் நலன் கருதி, மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்தார். அங்கு, ராமச்சந்திரன் தொடர்ந்து மது அருந்திவிட்டு பாலியல் தொல்லை செய்ததால், ராணி கொலை செய்துள்ளார் என, தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.