வவுனியா திருநாவற்குளத்தில் வீதியினை செப்பனிட்டு தருமாறு கோரி போராட்டம்!!

757

திருநாவற்குளத்தில்..

வவுனியா திருநாவறக்குளம் முதலாம் ஒழுங்கையின் 970 மீற்றர் தூரத்தினை செப்பனிட்டு தருமாறு கோரி பொதுமக்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (15.12.2022) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மோசம் மோசம் வீதியோ படு மோசம், வேண்டும் வேண்டும் வீதி வேண்டும், ஐரோட் 5 வருடங்கள் வீதியோ கேள்விக்குறி, கவனி கவனி ஆர்.டீ.ஏ எம்மை கவனி,

கிராமத்தின் வளர்ச்சி வீதியின் அபிவிருத்தி போன்ற கோசகங்களை எழுப்பியவாறும் விவசாய உற்பத்திகளை நகரம் தாண்டி நரகம் அனுப்பு ஐரோட் , ஆர் டீ ஏ ஒப்பந்த நிறுவனத்தை வலியுறுத்து,

மோசம் மோசம் எமது வீதி படுமோசம் போன்ற வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 25க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.