விளையாட்டால் நடந்த விபரீதம் : 7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!

596

திண்டுக்கலில்..

குழந்தைகள் வளர்ப்பில் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நம் சிறு அலட்சியம் கூட குழந்தைகளுக்கு விபரீதமாக முடிந்து விடும். இதே போல் ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மெட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி.

இவர்களுக்கு 7 வயதில் யுகந்திகா என்ற மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். இதில் யுகந்திகா, மெட்டூரில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தாள்.

குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் படுக்கை அறையில் யுகந்திகா கையில் சால்வை துணியை வைத்தபடி சுற்றிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து ஜன்னல் கம்பியில் சால்வை துணியை கட்டி, தனது கழுத்தில் கோர்த்துக்கொண்டு விளையாடினாள்.

இதில் எதிர்பாராதவிதமாக சால்வை துணி, யுகந்திகாவின் கழுத்தை இறுக்கத் தொடங்கிவிட்டது. அவளால் கத்த கூட முடியவில்லை. அதே இடத்தில் மயங்கி விழுந்து விட்டாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவளை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அதற்குள் யுகந்திகா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி திடீரென உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.