ஆபாசப் படம் நிறைந்த மடிக் கனணி திருமணம் செய்ய வேண்டும் : விநோத வழக்கு!!

577

LAp

ஆபாசப்படம் நிறைந்த தனது மடிக் கனணியை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த விநோத வழக்கு ஒன்று அமெரிக்க நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ் செவிர் என்ற வழக்கறிஞர், இசையைப் போலவே ஆபாச படங்களையும் அதிகமாக நேசித்துள்ளார். அவரது மடிக் கனணியில் நிறைய ஆபாசப்படங்களை சேமித்து வைத்துள்ளாராம் கிறிஸ்.

இந்நிலையில் உடாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து அவருக்கு ஒரு திடீர் ஆசை வந்துள்ளது. அது என்னவென்றால், ஆபாசப்படம் நிறைந்த தனது மடிக் கனணியை திருமணம் செய்து கொள்வது தான்.

இந்த விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திக்க விரும்பிய கிறிஸ், திருமண லைசென்ஸ் கோரி சம்பந்தப்பட்ட துறையை அணுகியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை அத்துறை நிராகரிதுள்ளது.

இதனால் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கிறிஸ். வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் ஹிங்கிள் இது கேலிக்கூத்தாக இருப்பதாக கூறி அதனை நிராகரித்தார்.