சிறு வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 12 வருட சிறை!!

558

Abuseதனது சிறு வயது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தந்தைக்கு 12 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்நாயக்க இத்தண்டனை தீர்ப்பை அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் அதனை வழங்கத் தவறினால் மேலும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் பெரிமயன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு பெப்ரவரி 10ம் திகதி குறித்த தந்தை தனது சிறு வயது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.