வவுனியாவில்..
வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரது அந்தரங்க படங்களை வைத்து பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் இளம் யுவதியை மணம் முடிப்பதாக கூறி ஆசை வார்த்தைகளை காட்டியதுடன், இருவரும் பகிர்ந்து கொண்ட படங்களை வைத்து யுவதியை அச்சுறுத்தி பணம் பெற்றதாகவும்,
தொடர்ந்து குறித்த காணொளிகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.