வெசாக் வாரத்தை முன்னிட்டு மதுபான, இறைச்சி கடைகள் மூடல்!!

527

Closedவெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் மூடப்படவுள்ளன.எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு மூடப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் சகல மதுபானக் கடைகளும் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மூடப்பட வேண்டும் என கலால் திணைக்கள ஆணையாளர் பிரபாத் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

உத்தரவினை மீறிச் செயற்படும் மதுபானசாலைகளை சுற்றி வளைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் வர்த்தக நிலையங்களிலும் இரண்டு நாட்களுக்கு இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.