இறுதியாக ஒருமுறை முகத்தை காட்டுங்கள் : பிரித்தானியாவில் இறந்த இந்திய பெண்.. பணமில்லை என தந்தை கண்ணீர்!!

386


பிரித்தானியாவில்..



பிரித்தானியாவில் உயிரிழந்த கேரள பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான போதிய பணமில்லை தங்களிடம் இல்லை என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.



Kettering என்ற இடத்தில் வாழ்ந்துவந்த செவிலியரான அஞ்சு அசோக் (40), அவரது பிள்ளைகளான ஜீவா சாஜு (6) மற்றும் ஜான்வி சாஜு (4) ஆகியோர் கடந்த வியாழன் அன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.




பொலிசார் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்றபோது அங்கு ஆடை முழுவதும் இரத்தத்துடன் காணப்பட்ட அஞ்சுவின் கணவரான சாஜுவை (52) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


அஞ்சு உடலுக்கு நடந்த பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனிடையில் அஞ்சு மற்றும் அவரின் குழந்தைகளின் சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் நிதி சிக்கல் இருப்பதாக குடும்பத்தார் கவலை தெரிவித்துள்ளனர்.

அஞ்சுவின் தந்தை அசோக் கூறுகையில், சடலங்களை ஊருக்கு கொண்டு வர ரூ 30 லட்சம் வரை செலவாகும். இவ்வளவு பணத்தை என்னால் தயார் செய்ய முடியாது, கடைசியாக ஒருமுறை மகளின் முகத்தை பார்க்க வேண்டும்.


கடந்த 2018 வெள்ளத்தில் அனைத்தையும் இழந்துவிட்டேன், சிறிய நிலமும் வீடும் மட்டுமே இருக்கிறது. எனக்கு மக்கள் உதவுவார்கள் என நம்புகிறேன். உதவக்கூடிய எவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என கூறியுள்ளார்.