வவுனியாவில் தூய தமிழில் பெயர் வைத்த குடும்பங்களுக்கு கௌரவிப்பு!!

2694

தூய தமிழில் பெயர்..

‘தனயன் வழியில் வழியில் தமிழ்மொழி காப்போம்’ என்னும் தொனிப் பொருளில் தூய தமிழில் பெயர் வைத்த குடும்பங்களுக்கு பணப் பரிசில் வழங்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.



தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இந்நிகழ்வு இன்று (19.10) இடம்பெற்றிருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் பிறக்கின்ற குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞரணியால் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் முதல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாவது மாவட்டமாக வவுனியாவில் தூய தமிழில் பெயர் வைத்த 22 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் பணம் பரிசாக வைப்பு செய்யப்பட்டு வங்கிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீபிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் இளைஞரணிச் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.