வவுனியாவில் கனமழை காரணமாக 5 வீடுகள் பாதிப்பு!!

1040

கனமழை..

வவுனியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.



சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வவுனியாவில் இன்று (19.12) அதிகாலை முதல் மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் 5 வீடுகள் அதிகமாக பாதிப்படைந்துள்ளதுடன்,

மேலும் பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீடுகளில் வசித்துவரும் மக்கள், நோயாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களின் நிலமை தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கவனம் செலுத்தியுள்ளது.