100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் : சிறுமி பலி!!(படங்கள்)

570

வத்தளையிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில், களனி கங்கையை அண்மித்த பகுதியில் வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கார் பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனா். இவ்விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளதோடு மேலும் காயமடைந்த ஆறு போ் கிதுல்கல தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் வத்தளை தெலங்கபான பிரதேசத்தையுடைய ஒரே குடும்பத்தை சோ்ந்தவா்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளாகியவா்கள் இன்று பொகவந்தலாவில் நடைபெறவிருந்த கல்யாணத்திற்காக மாப்பிள்ளையை அழைத்து வந்த குடும்பம் என கினிகத்ஹேன பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

இவ்விபத்து தொடா்பான மேலதிக விசாரணைகளை கினிகத்ஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

1 2 3 4