இளங்கன்று பயமறியாது எனக் காட்டும் சகோதர, சகோதரி : விஷப்பாம்புகளை பிடித்து மகிழும் குடும்பம்!!

636

கேரளாவில்..

கேரளாவில் பாம்பு பிடிப்பதை பொழுது போக்காக கொண்ட நபரின் மகளும், மகனும் பயமின்றி அவருடன் இணைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயத்தை சேர்ந்தவர் சுபாஷ்.



மர வேலை செய்யும் இவருக்கு சிறுவயதில் இருந்தே விஷப்பாம்புகளை பிடிப்பது தான் பொழுதுபோக்கு. அதே நேரம் பாம்புகளை சுபாஷ் கொல்ல மாட்டார், மற்றவர்கள் கொல்லவும் விடமாட்டார், பாம்புகளை பிடித்து காட்டு பகுதியில் விட்டு விடுவார்.

கடந்த 35 ஆண்டில் இதுவரை 1000க்கும் அதிகமான பாம்புகளை அவர் பிடித்துள்ளார். சுபாஷின் மகள் மற்றும் மகனான ஆர்யாவும் அனந்துவும் தங்கள் தந்தையின் பாம்பு பிடிக்கும் உற்சாகத்தை பார்த்து அவர்களுக்கும் அந்த ஆசை வந்தது.

சுபாஷிடம் தங்கள் விருப்பத்தை சொன்ன போது அவரும் உற்சாகமடைந்தார். சுபாஷ் வனத்துறையின் ஏற்பாட்டில் பாம்பு பிடிக்கும் பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறார். மீட்கப்பட்ட பாம்புகளைக் காட்சிப்படுத்தவோ, பார்வையாளர்களின் கைதட்டல்களைப் பெறவோ அவர் ஆர்வம் காட்டவில்லை.

பாம்பை பிடித்தவுடன் அங்கிருந்து சென்று விடுவது தான் சுபாஷின் வழக்கம். ப்ளஸ் டூ முடித்த அனந்துவும், பிளஸ் ஒன் மாணவி ஆர்யாவும் தற்போது வனத்துறையிடம் பயிற்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.