மெய்மறந்து இறுதிப்போட்டியை பார்த்த தந்தை.. 5வது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

1194

மும்பையில்..

மும்பையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியை ஆர்வத்துடன் தந்தை பார்த்துக் கொண்டிருந்த போது தவறுதலாக 3 வயது சிறுவன் 5வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கார்வாரே என்ற கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளப் வான்கடே ஸ்டேடியத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. இந்நிலையில் இந்த கிளப்பில் கடந்த ஞாயிறு அன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான இறுதிப்போட்டியைக் காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கிளப்பின் மேல்தளத்தில் இறுதிப்போட்டியைப் பலரும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். இங்கு போட்டியைப் பார்ப்பதற்காக வினோஷ் ரத்தோட் என்பவர் தனது 3 வயது மகனுடன் வந்துள்ளார்.

அப்போது சிறுவன் ரித்யாஷ் மற்றும் 10 வயது சிறுவன் ஒருவனும் மாடியிலிருந்து கீழே வந்து வாஷ் ரூமுக்கு சென்று விட்டு மீண்டும் மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது சிறுவன் தவறி 5வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த, உடன் வந்த சிறுவன் உடனே மேலே சென்று அவனது தந்தையிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது மகன் இல்லாததை கண்டு கீழ்த்தளத்திற்குச் சென்று பார்த்தனர்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிறுவன் 5 மாடியிலிருந்து கீழே விழுந்து கிடந்தான். அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு அங்கு சென்று பார்த்துள்ளார். பல மணி நேரம் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்கட்டுகளின் இடைவெளியில் வலைவு அமைக்காததாலே தனதுமகன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கிளப் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.