பெற்ற தாயை கத்தியால் குத்தி தங்கச் சங்கிலியை பறித்த மகன்!!

644

Knif

தனது தாயை கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்தி அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது சொந்த மகன் கத்தியால் தன்னை தாங்கி விட்டு 24,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளதாக மாரவில – ஹந்தினிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயான தாய் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.