இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக மிரட்டல்!!

502

Haris

சென்னையில் பிரபல இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜை கடத்தப்போவதாக மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், 20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதுபற்றி சுமா அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மிரட்டல் ஆசாமிகள் பேசிய அழைப்புகளை வைத்து விசாரித்த பொலிசார் இதுதொடர்பாக திருமலை மற்றும் அவரது நண்பர்கள் அருணாச்சல பாண்டியன், முத்துகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்தனர்.

விசாரணையில் ஹரிஸ் ஜெயராஜின் தந்தையிடம் சாரதியாக வேலை பார்த்த திருமலை, தனது நண்பர்களுடன் சேர்ந்து இவ்வாறு மிரட்டியது தெரியவந்தது.