102 குழந்தைகள் பெற்ற பின்னர் நபர் எடுத்த திடீர் முடிவு..12 மனைவிகளுக்கு வைத்த வேண்டுகோள்!!

392

உகாண்டாவில்..

உகாண்டாவின் முசா ஹசாஹ்யா(67) என்ற நபர் 102 குழந்தைகளுக்கு தந்தையான பிறகு தனது 12 மனைவிகளையும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

உகாண்டாவின் புகிசாவில் மூசா ஹசாஹ்யா(67) என்ற நபர் தனது 12 மனைவிகளுடன் இணைந்து 102 குழந்தைகளை பெற்று எடுத்துள்ளார். இவருக்கு மொத்தம் 568 பேரக் குழந்தைகளும் தற்போது உள்ளனர்.

இந்நிலையில் தனது பெரிய குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதால் மூசா ஹசாஹ்யா தன்னுடைய 12 மனைவிகளையும் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் குழந்தை பிறக்கும் வயதில் உள்ள தன்னுடைய மனைவிகள் அனைவரையும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மூசா ஹசாஹ்யா பேசிய போது, குறைந்த வளங்கள் மட்டுமே என்னிடம் இப்போது இருப்பதால் குழந்தைகள் பெற்றெடுப்பதை என்னால் இனி பொறுத்துக் கொள்ள முடியாது.

மேலும் நான்கு மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், இத்தகைய விஷயம் சரியில்லாததால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் ஊக்கப்படுத்துகிறேன் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

568 பேரக்குழந்தைகளை கொண்ட மூசா, உகாண்டாவின் புகிசாவில் 12 படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கிறார். மூசா தனது குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் பிரித்துச் சொல்ல முடியும் என்றாலும், அவர்கள் அனைவரையும் தனக்கு பெயரால் தெரியாது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மூசா ஹசாஹ்யா 1971ம் ஆம் ஆண்டு தனது 16வது வயதில் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு ஹனிஃபா என்ற பெண்ணை தனது முதல் மனைவியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கிராமத்தலைவராகவும், தொழிலதிபராகவும் இருந்த அவர், பணமும் நிலமும் தன்னிடம் இருந்ததால் குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அப்போது என்னால் சம்பாதிக்க முடிந்ததால், அதிக பெண்களை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மூசா தனது முதல் மனைவி ஹனிபாவை திருமணம் செய்து கொண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகளைப் பெற்றெடுத்தபோது அவர் முதல் முறையாக அப்பாவானார்.