பகலில் மாணவன்… இரவில் டீ வியாபாரி.. நெகிழ வைக்கும் இளைஞனின் பின்னணி!!

444


இந்தியாவில்..



இந்தியாவில் மாணவர் ஒருவர் இரவில் தேனீர் விற்பனை செய்து, பகலில் கல்வியைத் தொடர்ந்து இரண்டிலும் வெற்றிக்கொடி கட்டியுள்ளார். இரவில் தேனீர் வியாபாரத்தில் உழைக்கும் பணத்தை தனது கல்விச் செலவிற்காக குறித்த இளைஞர் செலவிடுகின்றார்.



இந்த மாணவனின் அர்ப்பணிப்புடனான உழைப்பினை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர், அந்த விடயத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார். இந்தக் காணொளி தற்பொழுது வைரலாகியுள்ளது.




அஜய் என்ற மாணவனின் உழைப்பினை வியந்து பாராட்டி கோவிந்த் குர்ஜர் என்ற ஊடகவியலாளர் கணொளியை வெளியிட்டுள்ளார். பகலில் கல்வியைத் தொடரும் அஜய், இரவில் சைக்கிளில் சென்று தேனீர் விற்பனை செய்கின்றார்.


இதன் மூலம் ஈட்டப்படும் பணத்தைக் கொண்டு உணவு, தங்குமிடம் மற்றும் வகுப்பு கட்டண செலவுகளை அஜய் ஈடு செய்து கொள்கின்றார். இந்த மாணவனின் செயற்பாடு குறித்து இணையத்தில் வெளியான காணொளியை பார்வையிட்ட பலரும் அவரை பாராட்டி மகிழ்வதடுன் அவரை ஊக்கப்படுத்தும் வகையிலான பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.