மனைவி மீது சந்தேகத்தில் கணவன் செய்த கொடூர செயல் : இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

894


விழுப்புரத்தில்…விழுப்புரம் அருகே மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன், கர்ப்பிணியாக இருந்த மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில், அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செல்வபாண்டியன் எனபரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஈஸ்வரனும் பாரதியும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், எதோ பிரச்சினை காரணமாக ஈஸ்வரன் தனது மனைவி பாரதியை விட்டு பிரிந்து சென்றார். கணவர் விட்டு சென்றதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த பாரதி தனது மகனுடன் வீரங்கிபுரம் பகுதியில் உள்ள தனது அத்தை லட்சுமி என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.


அப்போது விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான செல்வபாண்டியன் என்பருடன் பாரதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, செல்வ பாண்டியனும் பாரதியும் திருமணம் செய்து கொண்டு கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

பாரதி 4 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்த கர்ப்பத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று செல்வபாண்டியன் தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.


இதனால், இந்த தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. செல்வ பாண்டியன் கருவை கலைக்க வலியுறுத்தினாலும் பாரதி கருவை கலைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நான் இவ்வளவு சொல்லியும் மனைவி கருவை கலைக்காததால், கோபம் அடைந்த செல்வ பாண்டியன் பாரதியை மனைவி என்றும் பாராமல் கிழே தள்ளி கொடூரமாக தாக்கியிருக்கிறார்.

அடி வயிற்றில் காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், பாரதி வலி தாங்காமல் அலறி துடித்து இருக்கிறார். மேலும் பாரதிக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

பாரதி வலி தாங்காமல் அலறியதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பாரதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பாரதியின் தந்தை அளித்த புகாரின் போரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வபாண்டியனை கைது செய்தனர்.