பிரசவத்திற்கு முன் 100 KG பளு தூக்கி சாதனை புரிந்த அதிசயப் பெண்!!

352

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன் (33). இவரது கணவர் சாடு (34). கர்ப்பிணியான மேகன் குழந்தை பிறப்பதற்கு இரு தினங்கள் முன்புவரை கடுமையான முறையில் பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். தினமும் பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

எம்மூரில் கர்ப்பிணி பெண்களை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் அவர்களை பாதுகாப்பாக வீட்டினுள்ளேயே வைத்திருப்பார்கள். ஆனால், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தாய்மார்கள் இதனை அலட்டி கொள்ளாமல் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். இதற்கு ஓர் உதாரணம் கீழ்காணும் சம்பவம்.

அவர் வாரம் 4 முறை ஜிம்முக்கு போவதையும், நாள் ஒன்றுக்கு 3 மைல் தூரம் தனது செல்ல நாயுடன் நடை பயிற்சி மேற்கொள்வதையும் மற்றும் வாரம் ஒரு முறை 4 மைல் உயரத்திற்கு மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதையும் வழக்கம்போல் செய்து வந்தார். இவர் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு மருத்துவர் ஒப்புதல் அளித்துள்ளார். குடும்பத்தினர் மறுத்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தனது பயிற்சியை திறம்பட செய்து வந்துள்ளார்.

இது குறித்து மேகன் கூறும்போது, உடற்பயிற்சி மேற்கொண்டது எனக்கு நன்மை தருவதாக அமைந்தது. எனவே, எதற்காக நான் அதனை நிறுத்த வேண்டும், எனது பிரசவ ஹார்மோன்கள் நான் பளு தூக்குவதற்கு ஏற்ற வகையில் எனக்கு சாதகமாக உதவி புரிந்தன என்று தெரிவித்துள்ளார்.

அவர் தனது கர்ப்ப காலத்தின் 40வது வாரத்தில், பிரசவம் ஆவதற்கு 3 தினங்களுக்கு முன்பு வரை பளு தூக்குதல் பயிற்சியை மேற்கொண்டு அன்றைய தினம் 215 பவுண்டுகள் எடையினை தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளார். அவர், 110 பவுண்டு எடையினை தள்ளும் பயிற்சியையும், 165 பவுண்டு எடையுடன் கூடிய ஸ்குவாட் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

இதனால் அவரது உடற்திறன் அதிகரித்துள்ளது. மருத்துவர் அவருக்கு சொன்ன பிரசவ காலம் நெருங்கும்போது, அவரது பலம் அதிகரித்து இருந்தது. அவர் உற்சாகமாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது கணவரும், பளு தூக்குதல் பயிற்சியாளருமான சாடும் மேகனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

அதனுடன் அவர் பயிற்சி பெற்ற ஜிம் உடைய பெண் பயிற்சியாளர் ஆச்சரியமடைந்துள்ளார். ஒவ்வொரு வாரமும் மேகனின் அதிகரித்த உடல் வலிமை என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது அங்குள்ள மற்ற பெண் பயிற்சியாளர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

கடந்த மே 3ந்தேதி மேகனுக்கு 6.11 பவுண்டுகள் எடையுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு புளோரன்ஸ் ஜெர்மைன் என பெயர் வைத்துள்ளனர். அவரது பிரசவம் எளிமையாக இருந்தது என்றும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மேகன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில், சமீப காலங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் பளு தூக்குதல் போன்ற கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அமெரிக்க பெண்மணியான லீயா-ஆன் எல்லீசன் என்பவர் தனது 8 1/2 மாத கர்ப்ப காலத்தில் பளு தூக்குவது போன்ற புகைப்படம் வெளியாகி அதிக சர்ச்சைக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

11 12