நான் அழகாக இருக்கிறேன் என்பதால் கைது செய்கிறார்கள் : பொலிஸார் மீது இளம்பெண் குற்றச்சாட்டு!!

263


அமெரிக்காவில்..



அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற பெண்ணை பொலிஸார் கைது செய்ததை தொடர்ந்து, காவல் துறை அதிகாரி மீது அந்த இளம்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அமெரிக்காவில் உள்ள விமான நிலைய உணவகம் ஒன்றில் 28 வயதுடைய ஹெந்த் புஸ்தாமி என்ற இளம் பெண் உணவு சாப்பிட்டு விட்டு, அதற்கான பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.




இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகம் காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தப்பி ஓடிய பெண்ணை கைது செய்ய முயற்சித்தனர்.


அப்போது அந்த இளம் பெண் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்றில் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார். இறுதியில் ஹெந்த் புஸ்தாமி-யை சுற்றி வளைத்த பொலிஸார் அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர், ஆனால் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத புஸ்தாமி பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து ஒரு வழியாக புஸ்தாமியை கைது செய்த பொலிஸார், கைது நடவடிக்கையின் போது புஸ்தாமி பொலிஸாரிடம் சண்டை போட்டதாகவும், தன்னை கைது செய்த காவல்துறையினர் மீது எச்சில் துப்புவேன் என்று மிரட்டியதாகவும் வழக்கில் பதிவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


இந்நிலையில் பொலிஸாரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த புஸ்தாமி, “என்னை விட அழகான பெண்களை பொலிஸார் இதுவரை பார்த்தது இல்லை என்பதால், அவர்கள் என்னை கைது செய்து துன்புறுத்தினார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதே நேரம் காவல்துறையினர் மோசமான பா.லியல் குணம் படைத்தவர்கள் என்றும், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 28 வயதுடைய ஹெந்த் புஸ்தாமியிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்ட போது லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் அவர் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது தெரியவந்தது.