மாயமான மலேசிய விமானத்தில் புதிய சர்ச்சை: தோழிக்கு கொலை மிரட்டல்!!

301

Fli

விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணிய பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் வந்துள்ளது. பயணியின் பெண் தோழி சாராவிற்கு ஜெட் மறைந்ததில் இருந்து பல வினோதமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அடுத்ததாக உன்னை கொல்ல போகிறோம் என்று எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது என்று சாரா தெரிவித்துள்ளார்.

எனக்கு விமானம் மாயமானதை அடுத்து 2 வாரங்கள் கழித்து எனது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் நான் அடுத்ததாக உன்னை கொல்ல போகிறேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்று சாரா கூறியுள்ளார் என்று இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.

சாரா தனக்கு சீனாவை மையமாக கொண்ட தொலை பேசியில் இருந்தே மர்ம அழைப்புகள் வந்ததாக கூறியுள்ளார். எப்.பி.ஐ எச்சரிக்கையை அடுத்து அந்த மர்ம அழைப்புகள் நின்றுள்ளன. ஒரே தொலைபேசி எண்ணில் இருந்தே அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் வந்துள்ளது.

சாரா தற்போது பீஜிங்கில் உள்ளார். முன்னதாக அவர் தனது ஆண் நண்பர் பிலிப்புடன் வாழ பீஜிங்கில் இருந்து வெளியேற திட்டமிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எப்.பி.ஐ.விசாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், புளுபின்–21 என்ற நீர்மூழ்கி ரோபோவை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை. மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.