வவுனியா கன்னாட்டி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் கல்வி அக்கடமி!!(படங்கள்)

370

வவுனியாவில் இரு வாரங்களுக்கு முன் பெய்த கடும் மழையால் இடம் பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியிருந்து தற்சமயம் தமது சொந்த இல்லங்களுக்கு திரும்பியுள்ள மாணவர்கள் 34 பேருக்கு கற்றல் உபகரணங்கள் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் கல்வி அக்கடமி ,மற்றும் கனடா வாழ் ரஞ்சித்குமார் அனுசரணையில் வழங்கி வைக்க பட்டது .

பத்திரிகைகளிலும், இணையங்களிலும் அந்த மக்களின் அவலநிலை வெளிவந்த நிலையிலும் வன்னி பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் அந்த மக்களின் நிலையை நேரடியாக சென்று பார்த்து விடுத்த அறிக்கைகளின் மூலமாகவும் இந்த கற்றல் உபகரணங்கள் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்து வழங்கி வைக்க பட்டது .

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ), மாணிக்கம் ஜெகன், கனடா வாழ் ரஞ்சித்குமார், ஸ்டெபான் , லண்டன் வாழ் குமார், மற்றும் ரியோன், கன்னாட்டி மகளிர் சங்க தலைவி குணவதி, கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் லிங்கேஸ்வரன், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ) புத்தகங்கள் வழங்கிய தமிழ் கல்வி அக்கடமிக்கும், கொப்பிகள், கொம்பாஸ், பென், பென்சில்களை, தனது மருமகனும் ரியோனின் மகனுமான கிரோனின் நினைவாக அந்த கற்றல் உபகரணங்களைவழங்கிய ரஞ்சித்குமாருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டதுடன் ,புலம் பெயர் உறவுகள் மென்மேலும் எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார் .

மாணிக்கம் ஜெகன் தனதுரையில் புலம் பெயர் உறவுகள் செய்யும் உதவிகளை சரியான வகையில் நீங்கள் பயன்படுத்தி வாழ்கையில் முன்னேற வேண்டும் எனவும் அதுவே நீங்கள் அவர்கள் செய்யும் கைமாறு என கேட்டு கொண்டார். பின்னர் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன .

இறுதியில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் லிங்கேஸ்வரன் தனது நன்றி உரையில் தமிழ் கல்வி அக்கடமிக்கும், ரஞ்சித்குமாருக்கும் ,இந்த ஏற்பாடுகளை செய்த தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்புக்கும் நன்றியை தெரிவித்துகொண்டார்.

1 2 3 4 5 6 7