உடல் பருமனை குறைக்க மருந்து சாப்பிட்ட 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

179


காஞ்சிபுரத்தில்..இன்றைய அவசர யுகத்தில் எதற்காகவோ எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். உட்கார்ந்த இடத்திலேயே உடல் உழைப்பு எதுவும் இல்லாமலேயே ஏசிரூமில் வேலை பார்த்து குண்டர்களாகி விடுகிறோம். பின்னர் உடல் எடையை குறைக்க ட்ரட்மில்லை வீட்டில் வாங்கி வைத்து ஓடத்தொடங்குகிறோம்.இது தான் பலரின் வாழ்க்கை முறையாக உள்ளது. அதிலும் சிலர் வீட்டிற்குள் வீட்டிற்குள் ஓடுவதிலும் சோம்பேறித்தனப்பட்டு மருந்து மாத்திரைகளை உடல் மெலிவதற்காக சாப்பிடுகின்றனர். அத்துடன் அந்த டயட், இந்த டயட் என பலதையும் பின் தொடர்ந்து உடலையும் பாழாக்கி கொள்கின்றனர்.
சில நேரங்களில் இவை மிகப்பெரிய விபரீதங்களில் கொண்டு முடிந்து விடுகிறது. இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 20 வயது இளைஞர் சூரியா. இவர் அதே பகுதிய்ல் பால் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.


இவரது உடல் சற்று பருமனாக இருப்பதால் சில அசௌகர்யங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் நண்பர்களின் கேலி கிண்டல்களாலும் உடனே எடையை குறைத்து விட வேண்டும் என பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

அதன் ஒரு பகுதியாக சூர்யா உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை நாடினார். அந்நிறுவனம் வழங்கிய உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி 10 நாட்களாக அந்த மருந்துகளை சாப்பிட்டு வந்தார்.


இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்து வந்தது. இதனை கண்ட சூரியா மிகுந்த உற்சாகம் அடைந்துவிட்டார். ஆனால் திடீரென ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் இரவு சூர்யாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியது. இதனையடுத்து உறவினர்கள் அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருந்தை சாப்பிட்ட இளைஞர் சூர்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.