வவுனியா வேப்பங்குளத்தில் மோட்டார் சைக்கிளுடன் நகரசபை வாகனம் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்!!

1234


விபத்து..வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையினை அண்மித்த பகுதியில் இன்று (06.01.2023) காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிலுடன் நகரசபை வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில்,
அதே பாதையில் பயணித்த நகரசபை வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெளுக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.