வவுனியாவில் பசுமாடு கடத்திய இருவர் கைது!!

603

பசுமாடு கடத்திய இருவர் கைது..

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியிலிருந்து பம்பைமடுவிற்கு பசுமாடு கடத்தி சென்ற இரு சந்தேக நபர்களை ஈச்சங்குளம் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு இலட்சத்தி பதின்நான்காயிரம் ரூபா பெறுமதியான பசு மாட்டினை கடத்தி பம்பைமடுவிற்கு நடாத்திக்கூட்டிக்கொண்டு சென்றபோது அப்பிரதேச மக்களினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது,

அங்கு சென்ற பொலிசார் மறவன்குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.