வவுனியாவில் வயலுக்கு மேச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் சாவு : சந்தேக நபர் கைது!!

786


கல்மடு..பூம்புகார் கல்மடுப் பகுதியிலுள்ள வயல் ஒன்றில் மேய்ச்சலுக்கு சென்ற ஏழு மாடுகள் சாவடைந்துள்ளது. இதனடிப்படையில் வயலின் உரிமையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்ற உரிமையாளர் வயல் வாடியில் வைக்கப்பட்ட முப்பது கிலோ உரம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் குழாய் பைப் என்பன திருட்டுப்போயுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.