
பௌத்தர்களின் வெசாக் பண்டிகை நாடளாவிய கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வீதிகளில் அனைத்திலும் தன்சல் எனப்படும் தான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான தான நிகழ்வுகளில் 67 நிகழ்வுகளில் வழங்கப்பட்ட உணவுகள் மனித உடலுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடியவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த தானசாலைகள் மூடப்பட்டன என்று பொது சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தம்மால் இதுவரை 3048 தானசாலைகள் பரீட்சிக்கப்பட்டுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் 4800 தானசாலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





