ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு : பலிக்குமா பிரபல ஜோதிடர் வாக்கு!!

427

IPL

ஐ.பி.எல் 7வது தொடரின் கிண்ணத்தை வெல்ல ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக பிரபல மும்பை ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கூறியுள்ளார். இவர் விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தை துல்லியமாக கணித்து இவர்கள் சாதிப்பதை கூறுவாராம்.

அதாவது 2011ம் ஆண்டு நடந்த உலக்கிண்ணத்தில் அணித்தலைவர் டோனி சாதிப்பார் என்றும், ஐ.பி.எல் தொடரில் 2012ல் கம்பீரின் கொல்கத்தா, 2013ல் ரோகித் சர்மாவின் மும்பை அணி கிண்ணத்தை வெல்லும் என கூறியது நடந்துள்ளதாம்.

இந்நிலையில் இம்முறை விறுவிறுப்புடன் நடந்து வரும் ஐ.பி.எல் போட்டி பற்றி ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கூறுகையில், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகளுக்கு இம்முறை கிண்ணம் கிடையாது.

அதாவது டோனியின் அசாதாரணமான ஜாதக பலன் முடிந்துவிட்டது. இனி இவரால் பல அணிகள் பங்கேற்கும் தொடரில் சாதிக்க முடியாது. அதே போல் கம்பீர், ரோகித் ஏற்கனவே சாதித்து விட்டனர்.

ஆனால் பஞ்சாப்பின் பெய்லி, ராஜஸ்தானின் வட்சன் என, இருவரும் 1981, 1982ல் பிறந்தவர்கள். இவர்களது வலுவான ஜாதக பலன் காரணமாக, 2014ல் கிண்ணம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதற்கடுத்து ஐதராபாத் அணித்தலைவர் ஷிகர் தவானுக்கு அதிஷ்டம் அடிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.