16 நூற்றாண்டுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தக் காட்டேரி!!

582

போலந்தில் 16ம் நூற்றாண்டில் புதைக்கப்பட்ட காட்டேரியின் எலும்பு கூடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

போலந்தின் கமியன் பொமெர்ஸ்கி என்ற இடத்தில் இந்த இரத்த காட்டேரியின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த எலும்பு கூடு 16ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இது டவுன் தேவாலயத்தின் அருகில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இது இரத்தம் குடிக்காமல் இருப்பதற்காக, இதன் வாயில் கல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களின் தலைவர் கூறுகையில், இவ்வாறு நிறைய எலும்புக் கூடுகள் கடந்த 13 – 17ம் நூற்றாண்டில் புதைக்கப்பட்டுள்ளது என்றும் அது புதைக்கபட்டபின் மீண்டும் எழுந்து வராமல் இருக்க இரும்பு அல்லது மரக் கட்டைகளை வைத்து கட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

11 12 13