வவுனியாவில் ‘போதையை ஒழிப்போம் – தலைமுறை காப்போம்’ போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!!

571

விழிப்புணர்வு ஊர்வலம்..

‘போதையை ஒழிப்போம் – தலைமுறை காப்போம்’ என்னும் தொனிப்பொருளில் வவுனியாவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று (13.01) இடம்பெற்றது.

பள்ளிவாசல்கள், உலமாக்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முகைதீன் ஜீம்மா பள்ளி முன்றலில் ஆரம்பமான ஊர்வலமானது, மன்னார் வீதி வழியாக சென்று வவுனியா, குருமன்காடு சந்தியில் நிறைவடைந்து விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ‘மதுவை ஒழிப்போம் மகிழ்வுடன் வாழ்வோம், குடியால் நீ கெட விடியாது உன்வாழ்வு, போதை மரணத்தின் பாதை, போதை அது சாவின் பாதை, போதை மேல் போதை கொள் அழிவே கூடும்,

போதைப் பொருள் பாவனையை உடன் அறிவிப்பதற்கு 1984′ என எழுதப்பட்ட பல வகையான போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டதுடன், போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துரைகளும் இடம்பெற்றது.

இதில் பள்ளி வாசல்களின் நிர்வாகத்தினர், பொலிசார், உலமாக்கள், சுகாதாரப் துறையினர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.