மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்!!

371


காஞ்சிபுரத்தில்..



காஞ்சிபுரம் அருகேயுள்ள புத்தேரி கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.



இவர், சாலபோகம் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். ரஜினிகாந்தின் மனைவி லதா. தற்போது புத்தேரியில் வசித்து வரும் ரஜினிகாந்த் -லதா தம்பதிக்கு 3 மகள்கள். முதல் மகள் பூஜா தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் தனிஷியா காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.




மூன்றாவது மகள் பிரிதிஷா ஆறாம் வகுப்பு தனியார் பள்ளியிலும் படித்து வருகிறார். இரண்டாவது மகள் தனிஷியா பிளஸ் 1 வகுப்பில் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று வந்துள்ளார்.


இந்த நிலையில் ஆங்கில பாடத்தில் குறைவான மதிப்பெண் பெற்று வருவதாகவும், ஆங்கில வகுப்பில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர் கண்டித்துள்ளனர். மேலும், பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த தனிஷியா மாலை வீட்டுக்கு வந்தபோது, வகுப்பறையில் நடந்த விவரங்களை கூறாமல் படுக்கை அறையில் சோகமாக இருந்துள்ளார். பின்னர், மாலை ஆறரை மணி அளவில் வீட்டின் படுக்கையறை கதவு உள்ளே மூடப்பட்டு இருந்ததால்,


அவரின் பெற்றோர்கள் அருகில் இருந்த உறவினர்களை கூப்பிட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி தனிஷியா மின் விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு தனிஷியா ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் ஆய்வாளர் டேசில்பிரேம் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைத்துள்ளார்.

பள்ளி மாணவி மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை செய்ததில் அவர் வழக்கமாக டைரி எழுதும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது.

ஆங்கிலம் பேச, எழுத சரியாக வராததால் வகுப்பறையில் சக மாணவிகளின் முன்னிலையில் ஆங்கில ஆசிரியர் திட்டியதாகவும், ஆரம்பத்தில் இருந்து சரியான ஆங்கிலப் பள்ளியில் படித்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டு இருக்காது எனவும்,

இதனால் ஐ நோ ஹேப்பி எனவும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆங்கிலம் சரிவர எழுத படிக்க வரவில்லை என கடிதம் எழுதி மாணவி ஒருவர் தூக்கிட்டு இறந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.