ஆணவத்தில் நண்பர்களை ஒதுக்கி அவமானப்படுத்திய வடிவேலு : சீண்டிய சிங்கமுத்து!!

491

வடிவேலு..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. சில வருடங்களுக்கு முன் அவர் செய்த சில தவறால் சினிமாவில் நடிக்க தடை விதித்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

அதனை 4 வருடங்களுக்கு பின் உடைத்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்றது.

இப்படத்தின் தோல்விக்கு காரணம் வடிவேலுவுடன் சேர்ந்த இந்த கால காமெடி நடிகர்கள் தான் என்று பலர் விமர்சித்தனர். வடிவேலுவின் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அவருடன் பல காமெடி நடிகர்கள் நடித்து வந்தனர்.

சிங்கமுத்து, முத்துக்காளை உள்ளிட்ட பல நடிகர்கள் வடிவேலு காம்போவில் நடித்து வடிவேலுவுக்காகவே நடித்து கொடுத்தனர். தற்போது அவர்களை ஒதுக்கி அவமானப்படுத்திவிட்டு,

தற்போது சின்ன நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தது தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் தோல்விக்கு காரணம் என்று முத்துக்காளை உண்மையை உடைத்துள்ளார். நாங்கள் எல்லோரும் வடிவேலுவுக்கா நடித்தோம்.

ஆனால் இப்போது அவருடன் நடிக்கும் நடிகர்கள் தாம் வளரவேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். வடிவேலுவாக இருந்தாலும் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறியக்கூடிய மனநிலையில் இருக்கின்றனர் என்று முத்துக்காளை கூறியுள்ளார்.