வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

569


வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்..வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (17.01.2023) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தன்னிச்சையான அசாதாரண வரி திருத்தத்தை உடனடியாக மீளப்பெறு,


மருந்து இல்லை சுகாதார கட்டமைப்பும் சீர் குலைந்துள்ளது, சத்திர சிகிச்சைகளும் இல்லை மருந்துகளும் இல்லை என்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.