கொழும்பில் கொலை செய்யப்பட்ட 24 வயது யுவதி : பல்கலைக்கழக மாணவன் கைது!!

536


கொழும்பில்..



கொழும்பில் பல்கலைக்கழக மாணவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.




கொழும்பு குதிரைப் பந்தய திடலில் இருந்து 24 வயது யுவதியொருவர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 3ஆம் ஆண்டில் பயின்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.