திருமணம் முடித்து 3 மாதங்கள்… தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!!

281


அமெரிக்காவில்..அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் திருமணம் முடித்து 3 மாதங்களேயான நிலையில், இளம் பெண்ணின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பெண்ணின் உறவினர்களே சடலத்தை முதலில் பார்த்துள்ளனர். இந்த நிலையில், பெண்ணின் கணவன் கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர் பெயர் Anggy Diaz எனவும் 21 வயதான அவரை தலையை துண்டித்து கணவன் கொலை செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மதியத்திற்கு மேல் 4.18 மணிக்கு பொலிசருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.


இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவரை மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவரது பெயர் Anggy Diaz எனவும் திருமணம் முடித்து மூன்று மாதங்களே ஆனது எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், பெண்ணின் கணவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.