ஹோட்டலில் சாப்பிடச் சென்ற இளம் பெண்ணுக்கு காதலன் கண் முன்னே நடந்த விபரீதம்!!

382

விபத்து..

திருப்பூர், தாராபுரத்தில் ஜோடியாக ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது, காதலன் கண் எதிரிலேயே சாலையைக் கடந்து ஹோட்டலுக்கு வர முயன்ற காதலி, லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மனோஜ்(20) அந்த பகுதியில் மினி வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய சகோதரி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.

சகோதரியைப் பார்க்க பனியன் கம்பெனிக்கு மனோஜ் செல்லும் போது, சகோதரியின் தோழி காயத்ரி(19) பழக்கமாகி இருக்கிறார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறையையொட்டி காதலன் மனோஜைப் பார்ப்பதற்காக தாராபுரத்திற்கு காயத்ரி சென்றுள்ளார். பின்னர், இருவரும் இருசக்கர வாகனத்தில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.

பைபாஸ் சாலையின் எதிர்புறத்தில் உள்ள ஹோட்டலுக்குச் செல்வதற்காக காயத்ரியை இறக்கி விட்டுவிட்டு ஆச்சியூர் பிரிவு அருகே சென்று வாகனத்தை திருப்பி கொண்டு மனோஜ் ஓட்டல் அருகே வந்துள்ளார்.

இந்நிலையில், எதிர்புறம் நின்றிருந்த காயத்ரியை ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். மனோஜைப் பார்த்த காயத்ரி, சாலையில் சரக்கு லாரி வந்து கொண்டிருப்பதைக் கவனிக்காமல், ஆர்வமாக சாலையை கடந்து சென்றுள்ள நிலையில், லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் மனோஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.