வவுனியா மகாறம்பைக்குளம் 4ம் ஒழுங்கை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் அவர்களால் புனரமைப்பு!!(படங்கள்)

732

வவுனியா மகாறம்பைக்குளம் 4ம் ஒழுங்கை(காளி கோவில் வீதி) பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

இன் நிலையில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் திரு.இ.பிரசாத் அவர்களால் கனரக வாகனங்களின் உதவியுடன் இவ் வீதி நேற்றைய தினம் புனரமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதனால் இவ் வீதியூடாக பயணிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் திரு.பிரசாத் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

P1 P2 P3