பல்கலைக்கழக மாணவி கொலை : உளநல பாதிப்புக்கு சிகிச்சை : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

884

பல்கலைக்கழக மாணவி கொலை..

கொழும்பு பல்கலைகழக மாணவியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான நபர் அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மாணவியுடன் கல்விகற்ற மாணவன் பசிது சதுரங்க என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துவிட்டு மாணவியின் கண்ணை கட்டி குதிரைப்பந்தய திடலில் கொலை செய்தேன் என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குகையில், சூட்டி நான் மனநோயாளி என எப்போதும் என்னை ஏசுவார். இது என்னை வேதனையில் ஆழ்த்தியது. சில அவசரமான விடயங்கள் கதைக்கவேண்டும் வா என தெரிவித்து அவரை கொழும்பு குதிரைபந்தய திடலிற்கு அழைத்து வந்தேன்.

ஒருமாதகாலமாக நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன் அவர் இன்னொருவரை காதலிப்பதை விரும்பாததால் இவ்வாறு செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 முதல் நான் உளநலபாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்துள்ளேன், 2020லேயே நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன். நான் கிசிச்சைபெறுவதை நான் அவருக்கு தெரிவிக்கவில்லை. நான்கைந்து மாதங்களிற்கு முன்னர் அவருக்கு அது தெரியவந்ததை அடுத்து அவர் என்னுடனான உறவை நிறுத்த விரும்பினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் முற்றாக மாறிவிட்டார் என்னை பைத்தியம் என அழைத்தார் அவர் வேறு ஒரு உறவினால் அவ்வாறு மாறிவிட்டாரா என நான் ஆராய்ந்தேன். ஆனால் அவருக்கு அவ்வாறான உறவு இருக்கவில்லை. நான் அவரை சந்தேகித்தேன் அவர் என்னை பைத்தியம் என அழைத்ததால் எனக்கு கடும் வேதனையேற்பட்டது.

பின்னர் வேறு ஒருவரையும் அவர் காதலிப்பதை விரும்பாததால் நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன் வெல்லம்பிட்டி சந்தியில் வைத்து கத்தியை வாங்கினேன். கத்தியை மறைத்து வைத்தவாறு நான் வீட்டிலிருந்து சென்றேன்.

முதலாவது விரிவுரைக்கு பின்னர் விசேடமாக ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும் என்பதால் நான் சூட்டியை குதிரைபந்தய திடலிற்கு அழைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதலில் அவர் மறுத்தார் பின்பு நான் வற்புறுத்தியதால் அவர் இணங்கினார்.

நாங்கள் அங்கு சென்று அங்குள்ள தடாகத்திற்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம், அப்போது நான் அவருடன் கடும் கோபத்திலிருந்தேன் உனக்கு ஒரு ஆச்சரியம் என தெரிவித்துவிட்டு குதிரை பந்தய திடல் ஸ்கோர்போர்ட்டிற்கு அருகில் அவரை கொண்டு சென்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கண்மூடினேன் அவர் என்ன ஆச்சரியம் என கேட்டார். நான் பின்னர் அவரின் கழுத்தை வெட்டினேன், அவர் கதறினார் நான் தனது கழுத்தை மூடியிருந்த ஸ்கார்வை கழற்றிவிட்டு காப்பாற்றுமாறு கதறினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.

நான் அவரை மீண்டும் குத்தினேன். அங்கு சில யுவதிகள் காணப்பட்டார்கள். அவர்கள் அந்த இடத்திற்கு வரக்கூடும் என அஞ்சி நான் அங்கிருந்து தப்பியோடி பின்னர் பேருந்தில் ஏறி வெல்லம்பிட்டிக்கு சென்றேன்.

அங்கு புகையிரத்தின் முன்னால் பாய்வதற்கு திட்டமிட்டேன் ஆனால் புகையிரதம் வரவில்லை பின்னர் வீட்டிற்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு வந்து இரண்டு தடவைகள் களனி ஆற்றில் குதித்தேன்.

தற்கொலை செய்ய நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை என தெரிவித்த சந்தேக நபர் இதன் பின்னரே நான் கைதுசெய்யப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலை மாணவியின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது விசாரணையில் சந்தேக நபர் வெளியிட்ட தகவ்லகள் மேலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.