ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பாடகி : உதவி கோரி அழைப்பு!!

334


பிரித்தானியாவில்..நீண்ட காலம் முன்பு மரணமடைந்த போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பாடகி ஒருவர், தற்போது ஆவிகளுடன் பேசுவோரின் உதவியை நாடியுள்ளார்.பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde, நீண்ட காலம் முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.
லண்டனில் நடைபெற்ற தனது திருமணத்துக்கு, பிரபல நடிகை மர்லின் மன்றோ, எல்விஸ் மற்றும் எட்டாம் ஹென்றி ஆகியோர் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.


ஆனால், தங்கள் திருமண வாழ்வில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Brocarde. அவரது கணவரான Edwardo ஒரு ஆவியாக இருப்பதால், நினைத்த நேரமெல்லாம் வந்துவந்து போகிறாராம். அதாவது நிரந்தரமாக வீட்டில் தங்கமாட்டேன்கிறாராம்.

அவர் இனி சுதந்திரமாக அலையும் ஆவி எல்ல, அவர் என் கணவர் என்பதை புரிந்துகொள்ளமாட்டேன்கிறார் என்கிறார் Brocarde.


அத்துடன், பூனை ஒன்றை வாங்கவேண்டுமென Edwardo விரும்புகிறாராம். ஆனால், Brocardeக்கோ நாய்தான் பிடிக்குமாம்.

இப்படி அவருடைய நாடகங்களையெல்லாம் இனி என்னால் பொருத்துக்கொள்ள முடியாது என்று கூறும் Brocarde, ஆகவே, எங்கள் திருமண வாழ்வு நீடிக்கவேண்டுமானால் ஆவிகளுடன் பேசும் திருமண ஆலோசகர் ஒருவரின் உதவி எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.