வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனுத் தாக்கல்!!

422


வேட்புமனுத் தாக்கல்..வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசு கட்சி இன்று (20.01.2023) மதியம் 2.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் போது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக கட்சியின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.