வவுனியா இளைஞன் மட்டக்களப்பு கடற்கரையில் சடலமாக மீட்பு!!

826

Body

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சடலமாக நேற்று புதன்கிழமை காலை கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரியும் இளைஞன் ஒருவரே சடலமாக கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் கூறினர். சடலமாக மீட்கப்பட்டவர் 23 வயதான எம்.லதீஸன் என அவரது நண்பர்கள் அடையாளம் காண்பித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடலில் குளிக்கச் சென்றபோது உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் நண்பர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.