இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து : 7 பேர் பரிதாபமாக பலி!!

654

விபத்து..

நுவரெலியாவில், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (20.01.2023) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றை,

கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ்ஸில் பயணித்த 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது என்றும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளது என்றும் கூறப்படுகின்றது.