40 ஆண்டுகளாக லொட்டரி வாங்கியும் எதுவும் கிடைக்கவில்லை என ஏங்கியவருக்கு பொங்கலுக்கு அடித்த பேரதிஷ்டம்!!

809


இந்தியாவில்..இந்தியாவில் 40 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த நபருக்கு தற்போது ரூ 5 கோடி பிரம்மாண்ட பரிசு விழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஹந்த் துவாரகா தாஸ் (88).இந்த முதியவர் கடந்த 40 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கி வந்திருக்கிறார். அவருக்கு சொல்லி கொள்ளும் வகையில் பரிசுகள் எதுவும் இதுவரையில் கிடைக்காத நிலையில் தற்போது பொங்கல் குலுக்கலில் ரூ 5 கோடி பரிசு விழுந்துள்ளது.
முதியவர் தாஸ் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் கடந்த 35-40 வருடங்களாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கி வருகிறேன். வெற்றி பரிசு தொகையை எனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பேன் என்றார்.


தாஸ் மகன் நரேந்தர் குமார் கூறுகையில், என் தந்தை அவரிடம் பேரனிடம் பணம் கொடுத்து லொட்டரி டிக்கெட் வாங்க சொன்னார், அதற்கு பரிசு விழுந்துள்ளது. நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளோம் என கூறியுள்ளார்.