வவுனியாவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்!!

355


ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு..வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று (21.01.2023) காலை 11.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.மேழிக்குமரன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான தேர்தல் முகவர் ஜி.ரி.லிங்கநாதனும் கலந்து கொண்டிருந்தார்.