ஆன்லைன் கேம் மோகத்தால் கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

278

திருச்சியில்..

 

ஆன்லைன் விளையாட்டுக்களால் இளைய தலைமுறை சீரழிந்து வருகிறது. இதனை தட்டி கேட்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுப்பதுடன் அவர்களின் வாழ்க்கையையும் கேள்வி குறியாக்கி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் அரவிந்தா நகரில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் 18 வயது பாலகுமார் . இவர் திருச்சி சமயபுரத்தில் அமைந்துள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் பொங்கலுக்கு கல்லூரியில் தொடர் விடுமுறை விடப்பட்டதால் பாலகுமார் வீட்டிற்கு வந்தார். எந்த நேரமும் ஓய்வின்றி ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக ‘பிரீ பயர்’ என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடிக் கொண்டே இருந்தார்.

அவரது தாய் அம்பிகா பாலகுமாரை வன்மையாக கண்டித்துள்ளார். மனம் உடைந்த பாலகுமார் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையை கட்டி தூக்கு போட்டுக் கொண்டார்.

இதனைக் கண்ட பாலகுமாரின் தாத்தா வெள்ளையன் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். உடனடியாக பாலகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஆன்லைனில் கேம் விளையாடியதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால் தூக்குப்போட்டுக் கொண்ட பாலகுமார் தற்கொலை முயற்சி செய்தார். அப்போது உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.