3 அடி குழந்தையின் உடலுக்குள் சிக்கிய இளம்பெண் : காதலில் வீழ்ந்த சுவாரஸ்யம்!!

760

அமெரிக்கவில்..

வெறும் மூன்று அடி 10 அங்குலம்தான் இருக்கிறாரே, சின்னப்பிள்ளையாக இருப்பாரோ என்று அருகில் சென்று பேசினால், ஹேய், எனக்கு வயது 23 என்கிறாராம் அவர்.

குழந்தையாக இருந்தபோது தாக்கிய புற்றுநோய் அமெரிக்கவில் வாழும் Shauna Rae சிறுபிள்ளையாக இருந்தபோது அவரை மூளைப் புற்றுநோய் தாக்கியுள்ளது. சிகிச்சை மூலம் அவர் புற்றுநோயை வென்றுவிட்டார்.

ஆனால், சிகிச்சையின் ஒரு கடுமையான பக்க விளைவு அவரது உடலின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, ஒரு சராசரி 8 வயது சிறுமியின் அளவுக்கே அவரது உடல் வளர்ச்சி அடைந்தது.

தனது உயரம் குறித்து முதலில் வருந்தினாலும், பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் துவங்கினார் Shauna. அவர் நடத்தும் I Am Shauna Rae என்னும் அந்த தொடரில் இப்போது தனக்கு காதல் வந்திருப்பதைக் குறித்து பேசியுள்ளார் Shauna.

வேல்ஸ் நாட்டவரான Dan (26) என்பவருக்கும் Shaunaவுக்கும் காதல் மலர்ந்திருக்கிறதாம். Danக்கு உலகம் சுற்றுவது மிகவும் பிடிக்குமாம். எனவே ஒன்றில் ஓரிடத்தில் செட்டில் ஆகவேண்டும், அல்லது Danஉடன் உலகம் சுற்றவேண்டும் என முடிவு செய்துள்ளாராம் Shauna.

தங்கள் மகளின் நிலைமை குறித்து வருந்திவந்த Shaunaவின் பெற்றோருக்கும் Danஐ மிகவும் பிடித்துப்போக, அவருடன் உலகம் சுற்றத்துவங்கிவிட்டார் Shauna. Shaunaவின் பெற்றோரின் அனுமதியுடன் காதல் ஜோடி மலேசியாவில் உள்ள நண்பர் ஒருவரின் திருமணத்துக்குச் செல்ல முடிவு செய்துள்ளது.