விடுதலைப் புலிகள் மீதான தடை இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!!

587

banned

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் மீது கடந்த 1991ஆம் ஆண்டு இந்திய அரசு முதலில் தடை விதித்தது. அதிலிருந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடையை நீட்டிப்பு செய்து வந்தது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் மீதான தடையை மேலும், 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.