பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

404


பாண்..நாடளாவிய ரீதியில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை குறைப்பது குறித்து அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பாண் விற்பனை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளமையினால் விலை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது பாண் ஒரு இறாத்தல் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், பாண் விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாண் கொள்வனவை குறைத்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.