வவுனியாவில் 17 வருடங்களின் பின்னர் இளங்கோ அடிகள் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள்)

361

வவுனியா வரியிறுப்பாளர் சங்கமும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து கோவில்குளம் சிவன் கோவில் அனுசரணையில் 17 வருடங்களின் பின்னர் அனுஷ்டித்த இந்த நிகழ்வு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன், பிரதேச செயலாளர் கா.உதயரசா, சிவன் கோவில் தலைவர் நவரத்தினராசா, மக்கள் சேவை மாமணி சேனாதிராசா, முன்னால் நகரபிதா நாதன், சமுக ஆர்வலர்கள் வில்வராசா, விக்னா, செல்வரத்தினம், திருவிளங்கம், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க உறுப்பினர்கள் சிவபாலன், மாணிக்கம் ஜெகன், கிறிஸ்டோபர், அதிபரும் வவுனியா மத்தியஸ்த சபை தலைவருமான வரதராச, இவர்களுடன் 1997 இல் நகரசபையால் நிறுவபட்ட இந்த சிலையை திறந்து வைத்த அந்நேர உபநகர பிதா சந்திரகுலசிங்கம்(மோகன் )உட்பட அருளகம் மாணவர்களும் கலந்து கொண்டனர்

மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர்
நிகழ்வில் இளங்கோ அடிகள் பற்றியும் அவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளையும் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் நயம்பட பேசினார். சிலப்பதிகாரம் மூலம் கண்ணகி அம்மன் வழிபாட்டை தொடக்கி வைத்த பெருமையும் கண்ணகி சோழ நாட்டில் பிறந்து பாண்டியநாட்டில் வழக்காடி சேர நாட்டில் தெய்வமானார் எனவும் சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகி அம்மன் வழிபாட்டை தொடக்கினான் என்றும் இலங்கையை ஆண்ட சிங்கள மன்னன் கஜபாகு சேர நாட்டில் இடம் பெற்ற கண்ணகி அம்மன் வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டான் என்றும் சிலபதிகாரம் கூறுவதாகவும், கஜபாகு மன்னன் இலங்கை வந்து பத்தினி தெய்வ வழிபாட்டை தொடகியதாகவும் வரலாறு சொல்லவதாக மிக சிறப்பாக உரையாற்றினார் .

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் சிறு உரையாற்றினார். பின்னர் பூமரக் கன்றுகள் நாட்டி வைக்கபட்டன. சந்திரகுமார் (கண்ணன் ) நன்றி உரையாற்றினார். இறுதியில் நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும் சிவன்கோவிலால் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கபட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10