மாமியார் வீட்டுக்கு போன மனைவி திரும்ப வராததால் தன் பிறப்புறுப்பையே வெட்டிக்கொண்ட கணவன்!!

1508


பீகாரில்..வீட்டிற்கு வரமறுத்த மனைவி மீது ஆத்திரமடைந்த கணவன், தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் பீகாரில், மாதேபுரா அருகே உள்ள ரஜினிநாயநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 25).6 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்பவருடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் என 4 குழந்தைகள் இருக்கின்றனர். வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் கிருஷ்ணா, 2 மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்தை சந்திக்க வீட்டுக்கு வருவார். இதனால் அனிதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவார்.
இந்த நிலையில் சமீபத்தில் கிருஷ்ணா தனது குடும்பத்தை காண வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் வீட்டிற்கு சென்ற அனிதா வீடு திரும்பவில்லை. இதனால் அனிதாவை கணவர் கிருஷ்ணா வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் என்ன பிரச்னை என்று தெரியவில்லை, அனிதா வர மறுத்துள்ளார்.


இருப்பினும் தொடர்ந்து அவரை அழைத்த கிருஷ்ணாவை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் மனைவி அனிதா. கிருஷ்ணாவின் குடும்பத்தாரும் அனிதாவை அழைத்துள்ளனர். இருந்தும் அனிதா அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வளவு கூறியும் வராத மனைவி மீது கிருஷ்ணா ஆத்திரமடைந்த கிருஷ்ணா, அந்த கோபத்தை தன் மீதே காட்டிக்கொண்டார். வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். பின்னர், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த கிருஷ்ணாவை கண்ட உறவினர்கள், இரத்த வெள்ளத்தில் மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவர் இப்படி நடந்துகொண்டது குறித்து சரியான விளக்கம் தெரியவரவில்லை.

பெற்றோர் வீட்டில் இருந்து மனைவி வரமறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.